மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் ஐயாவுக்கு: ஈழத்தமிழர்களின் உரிமைகள் மற்றும் நீதிக்கான அவசர கோரிக்கை மற்றும் வாழ்த்து மடல்
ABC தமிழ் ஒலி- (NGO with UN ECOSOC Special Status) தலைமை நிர்வாக அலுவலர் | மனித உரிமைப் போராளி | சுயாதீன ஆய்வாளர்
பிராம்ப்டன், ஒன்ராறியோ, கனடா
12 மே, 2026
மாண்புமிகு சி. ஜோசப் விஜய்
அவர்கள்
தமிழக முதலமைச்சர்
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
தமிழ்நாடு, இந்தியா.
cmcell@tn.gov.in
cmo@tn.gov.in
பொருள்: ஈழத்தமிழர்களின் உரிமைகள் மற்றும் நீதிக்கான அவசர கோரிக்கை மற்றும் வாழ்த்து மடல்
மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் ஐயாவுக்கு,
ABC தமிழ் ஒலி அமைப்பின் சார்பாகவும்,
உலகளாவிய மனித உரிமைப் போராளிகள் மற்றும் ஆய்வாளர்களின் சார்பாகவும், தமிழக முதலமைச்சராகப்
பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்ற முதல் நாளிலேயே, மரபுகளை
உடைத்து நீங்கள் முன்னெடுத்த நவீன அரசியல் அணுகுமுறையும், உடனடி அரசாணை கையொப்பங்களும்
தமிழகத்தில் மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை
விதைத்துள்ளது. ஒரு "புதிய தலைமுறை" அரசியலைத் தொடங்கியுள்ள உங்கள் தலைமையில்,
ஈழத்தமிழர்களின் நீதிக்காகவும் நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என நாங்கள் பெரிதும் நம்புகிறோம்.
ஒரு சுயாதீன ஆய்வாளர் மற்றும்
மனித உரிமைப் போராளி என்ற ரீதியில், ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம்
சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை உங்கள் மேலான கவனத்திற்கு அவசரமாகக் கொண்டு வருகிறேன்:
1. ஈழத்தமிழர்களின் பூர்வீக
உரிமைகளை அங்கீகரித்தல்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் (Indigenous people) ஆவர். தமிழக அரசு அவர்களைப் பூர்வீகக் குடிகளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். தமிழக அரசின் இத்தகைய அங்கீகாரம், சர்வதேச அரங்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நிலப் பாதுகாப்பிற்கான போராட்டத்திற்குப் பெரும் வலுசேர்க்கும்.
2. தமிழினப் படுகொலை குறித்த
சர்வதேச விசாரணைக்கான தீர்மானம்
2009-ல் நடந்த இனப்படுகொலைக்கான
நீதி இன்னும் கிடைக்கவில்லை. எனவே, தமிழக சட்டப்பேரவையில் கீழ்க்கண்டவற்றைக் கோரி ஒரு
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்:
●
ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட
இனப்படுகொலை, மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து
ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
●
இலங்கை அரசு புரிந்ததாகக் கருதப்படும்
ஆக்கிரமிப்புக் குற்றங்கள் (Crimes of Aggression) குறித்தும் சர்வதேச நீதி
விசாரணை கோரப்பட வேண்டும்.
3. தமிழர்களின் சம்மதமில்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MOU) நிறுத்துதல்
இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு
இடையே கையெழுத்தாகும் பல பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள், அந்த நிலத்தின்
உரிமையாளர்களான தமிழர்களின் சம்மதமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. எனவே:
●
தமிழர்களின் பிரதிநிதிகளின்
ஆலோசனையின்றி கையெழுத்தான அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் உடனடியாக நிறுத்தி
வைக்க மத்திய அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
●
எதிர்காலத்தில் வடக்கு மற்றும்
கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திட்டமும் தமிழர்களின் சம்மதத்துடனும்,
அவர்களின் பங்களிப்புடனும் மட்டுமே அமைய வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
"8 கோடி தமிழர்களும் என் மக்கள்" என்று நீங்கள் கூறிய வார்த்தைகள்
எல்லை கடந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கும் பொருந்தும் என நம்புகிறோம். பல தசாப்தங்களாகத்
தொடரும் எமது நீதிக்கான போராட்டத்தை, உங்கள் நவீன கால அரசியல் அணுகுமுறை வெற்றியடையச்
செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தின் புதிய சகாப்தம்
உலகத் தமிழர்களின் நீதிக்கான அரணாகத் திகழ வாழ்த்துகிறேன்.
மிக்க மரியாதையுடன்,
விமல் நவரத்தினம்
தலைமை நிர்வாக அலுவலர்
ABC தமிழ் ஒலி
Contact:
tamilolicanada@gmail.com, Tel : +1 416 399 3449
Profile:
https://viliththeluthamilaaengilsh.blogspot.com/p/about-abc-tamil-oli.html

Comments
Post a Comment
We would love to hear your thoughts! Whether you have feedback, questions, or ideas related to our initiatives, please feel free to share them in the comment section below. Your input helps us grow and serve our community better. Join the conversation and let your voice be heard!- ABC Tamil Oli (ECOSOC)