Posts

Showing posts from October 19, 2026

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல் கோரும் வழக்கு: விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்! (Tamil and English)

Image
சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல் கோரும் வழக்கு: விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்! இறுதிப் போர் காலத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) கீழ் வழங்குமாறு ஊடகவியலாளர் பா. நிரோஸ்குமார் கோரியிருந்தார். எனினும், குறித்த தகவல்களை வழங்க இராணுவம் மறுத்ததைத் தொடர்ந்து, தகவலறியும் ஆணைக்குழுவில் (RTI Commission) RTIC Appeal Case No. 1111/2022 ( P. Nirosh Kumar Vs. Sri Lanka Army ) கீழ் அவர் மேன்முறையீடு செய்திருந்தார். இதன்போது, அவருக்காக சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் முன்னிலையாகியிருந்தார். பல வருடங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த மேன்முறையீட்டில் தகவலறியும் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பில் திருப்தியடையாத ஊடகவியலாளர் பா. நிரோஸ்குமார், அதற்கு எதிராக 2023ஆம் ஆண்டு இலங்கை மேன்முறையீட்டு நீதி...